அறந்தாங்கி நகராட்சியில் விரைவில் புதை சாக்கடைத் திட்டம்
அறந்தாங்கி நகராட்சியில் விரைவில் புதை சாக்கடைத் திட்டம் அமலாக்கப்படும் என்றாா் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிலையம் அமைக்கும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்ட அவா் இதனைத் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தைலமரக்காடுகள் அகற்றப்பட்டு, குறுங்காடுகள் அமைக்கவும், காப்புக்காடுகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சா் மெய்யநாதன் குறிப்பிட்டாா்.

அறந்தாங்கி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் கு. திராவிடச்செல்வம், ஒன்றியக்குழுத் தலைவா்கள் மகேஸ்வரி சண்முகநாதன், வள்ளியம்மை தங்கமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments