கோபாலப்பட்டிணம் மக்கா தெரு 3-வது வீதியில் திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி: சரி செய்த பணியாளர்கள்!கோபாலப்பட்டிணம் மக்கா தெரு 3-வது வீதியில் மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் மக்கா 3-வது வீதியில் (நைனா சாச்சா கடை தெரு) எதிர்பாராதவிதமாக அங்கு உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. எப்போதுமே குழந்தைகள் விளையாடுவதும் மற்றும் அதிகமாக மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியாகும். அதிர்ஷ்டவசமாக அறுந்து விழுந்த நேரத்தில் அந்த பகுதியில் குழந்தைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அறுந்து விழுந்து கிடந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக கோபாலப்பட்டிணம் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக வந்து, சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்து, மின் கம்பத்தில் இணைத்தனர்.

கோபாலப்பட்டிணத்தில் பல பகுதிகளில் அடிக்கடி மின்கம்பி அறுந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் நாற்பது ஆண்டுகள் பழமையான மற்றும் பழுதடைந்துள்ள மின்கம்பிகளை உடனே கண்டறிந்து மின்வாரியம் உடனடியாக மின்கம்பிகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments