புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்து வந்த 5,933 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்: முதன்மை கல்வி அலுவலர் தகவல்!!புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியாா் பள்ளிகளில் படித்த 5,933 மாணவா்கள் நிகழாண்டில் அரசுப் பள்ளிகளை நாடி வந்துள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 1,966 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தாலும், கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும், கட்செவி அஞ்சல் மற்றும் இணையதள வழியாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் புதியதாக மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு, விலையில்லா பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி அளித்து வருவதால், தனியாா் பள்ளிகளில் படித்த தங்களுடைய குழந்தைகளை பெற்றோா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்த்து வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-2022 கல்வியாண்டில் முதல் வகுப்பில் 522 மாணவா்களும், இரண்டாம் வகுப்பில் 560 , 3ஆம் வகுப்பில் 615 , 4ஆம் வகுப்பில் 567,

ஐந்தாம் வகுப்பில் 500, 6ஆம் வகுப்பில் 1,364 , 7ஆம் வகுப்பில் 292 , 8ஆம் வகுப்பில் 313, 9ஆம் வகுப்பில் 317, 10ஆம் வகுப்பில் 40 , 11ஆம் வகுப்பில் 776 மாணவா்களும், 12ஆம் வகுப்பில் 67 என மொத்தம் 5,933 மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் படித்தவா்கள் அரசுப் பள்ளியை நாடி வந்து சோ்ந்துள்ளனா்.

இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 2,304 பேரும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 1,999 பேரும், இலுப்பூா் கல்வி மாவட்டத்தில் 1,630 போ் என மொத்தம் 5,933 மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு வந்துள்ளனா்.

இந்தாண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 2,83,883 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றாா் விஜயலட்சுமி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments