புதுக்கோட்டையில் காவல்துறையினரின் கழிவுநீா் சுத்திகரிப்புத் திட்ட அமைப்புகள் திறப்பு



புதுக்கோட்டை காவல்துறை சார்பில் கழிவு நீரை சுத்திகரித்து ஆயுதப் படை அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள பூங்கா பராமரிப்பிற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

மேலும் காவலர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனிடம் கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி பாலகிருஷ்ணன் கூறுகையில், மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில  மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றி  திரிந்த 50 பேர் கண்டறியப்பட்டு அவர்களை மீட்டு மனநல காப்பகத்தில் ஒப்படைத்து அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஒரு துன்பத்திற்கும் ஆளாக கூடாது என்பதற்காக இதுபோன்று நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்.

ஜாதி உணர்வோடு உள்ள நபர்களை கண்டுபிடித்து அவர்கள் ஜாதி உணர்வு குற்றங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடலோர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மத்திய மண்டலத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. அனைத்து கடலோர கண்காணிப்பு குழுவிலும் பெண்கள் உறுப்பினர்களாக கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சமூக நலத்துறை அதிகாரிகள் காப்பகங்களில் மீது கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர் அவ்வப்போது காவல்துறையும் அவர்களோடு இணைந்து பணிகளை செய்து வந்தது. தற்போது காவல் துறை மூலமாக காப்பகங்களின் எண்ணிக்கை குறித்து விபரங்கள் அறியப்பட்டு வருகிறது இனி சமூக நலத்துறை அதிகாரிகளோடு இணைந்து தீவிரமாக காப்பகங்கள் காவல்துறையாலும் கண்காணிக்கப்படும்
சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்காக மாவட்டம் தோறும் சைபர் கிரைம் குற்றத்தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது தற்போது செல்போன்கள் மூலமாகதான் சைபர் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது. நாளுக்கு நாள் புதிய புதிதாக மக்களை ஏமாற்றக் கூடிய சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களை பயன்படுத்தி சைபர் கிரைம் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

விளம்பரங்களை நம்பி தங்களுடைய டெபிட் கார்டு கிரெடிட் கார்டு தகவல்களை தர வேண்டாம் மத்திய மண்டலத்தில் கிராமங்கள்தோறும் சைபர் கிளப்பு தொடங்கப்பட உள்ளது. சைபர்கள் குற்றங்களைத் தடுப்பதற்கும் விழிப்புணர்வு கிராமங்களில் உருவாக்குவதற்கு தகவல் தொழில்நுட்ப படித்த இளைஞர்களை  பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

ஆன்லைன் வகுப்புகள் பொறுத்தவரை தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது அதன்படிதான் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.  முழுவதுமாக ஆன்லைன் வகுப்புகள்  ரெக்கார்டு  செய்யப்பட வேண்டும் என்று  உத்தரவிடப்பட்டுள்ளது வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல்  குற்றங்கள் ஏதாவது நடைபெற்றால் அதற்கு அந்த பள்ளிகளும் பொறுப்பாக வேண்டி வரும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments