நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!



நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொலைபேசி எண் எழுதப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கடந்த 07.01.2020 அன்று புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது. இந்நிலையில் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் வீட்டு வரி செலுத்த அவ்வப்போது ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை புரிகின்றனர். இந்நிலையில் ஒரு சில நேரங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டப்பட்டு எந்த ஒரு தகவலும் இல்லாமல் காணப்படும். 

இதனால் எப்பொழுது திறக்கப்படும் என்ற விடை தெரியாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை இருந்து வந்தது. மக்களின் வீண் அலைச்சலை தடுக்கும் விதமாகவும் வீட்டிலிருந்தே பொதுமக்கள் தொலைபேசியின் வாயிலாக புகார்களை தெரிவிக்கும் விதமாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயளாலர் ஆகியோரின் தொலைபேசி எண், தகவல் பலகை மற்றும் புகார் பெட்டி அமைக்க வேண்டி தமுமுக, பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் என பல தரப்பினர் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் ஒரு சிலரின் பல கட்ட முயற்சியிலும் அழுத்தத்தின் அடிப்படையிலும் நேற்று 30.06.2021 ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வெளியே பெயிண்ட் கொண்டு ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயளாலர் ஆகியோரின் தொலைபேசி எண் மற்றும் தகவல் பலகை எழுதப்பட்டது. இதனால் பொதுமக்கள் இனி வீண் அலைச்சல் மற்றும் வீட்டிலிருந்தே பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

இதில் நான்காவது வார்டு உறுப்பினரின் தொலைபேசி எண் விடுபட்டுள்ளது. மேலும் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படும் நேரம் மற்றும் புகார் பெட்டி அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments