புதுக்கோட்டையில் 250 ஜாக்கிகள் கொண்டு 4 அடி உயர்த்தி கட்டடப்படும் இரண்டு அடுக்குமாடி வீடு


புதுக்கோட்டை பெரியார் நகரில், இரண்டு மாடி வீடு ஒன்றை தரை மட்டத்தில் இருந்து.4 அடிக்கு உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜாக்கிகளைக் கொண்டு ஒவ்வொரு அடியாக கட்டடம் உயர்த்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை பெரியார் நகரில், செந்தில்குமார் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீடு உள்ளது. அந்த வீட்டை 4 அடி வரை உயர்த்தும் பணிகள் தற்போது நடந்துவருகின்றன. வீட்டை 250 ஜாக்கிகள் மூலம் உயர்த்தி அதன் மட்டம் உயர்த்தப்படுகிறது. மழைக்காலங்களில் வீட்டுக்குள் தண்ணீர் புகும் சூழல் காரணமாக வீட்டு உரிமையாளரின் விருப்பப்படி கட்டடம் இருந்த இடத்தில் இருந்து அப்படியே உயர்த்தப்பட்டுவருகிறது.

பழைய வீட்டை இடித்து புதிதாக கட்டினால் 80 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும்நிலையில், இவ்விதம் உயர்த்தப்படுவதால் நான்கரை லட்சம் ரூபாயில் முடிந்துவிடும் என்று இந்நிறுவனத்தினர் கூறுகிறார்கள். கடந்த 20 நாட்களாக நடந்துவரும் பணிகள் இன்னும் ஒருவாரத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக சாலை போடும்போதே பழைய சாலையை சுரண்டி எடுத்துவிட்டு புதிதாக சாலை அமைத்தால், காலப்போக்கில் வீடுகளின் மட்டம் கீழே போகும் நிலை ஏற்படாது. அண்மையில் தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு இதனை குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments