புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்: மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி தகவல்!!புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக சேர பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான படிவத்தை அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.pccbank.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் பங்குத்தொகை ரூ.100 மற்றும் நுழைவு கட்டணம் ரூ.10 ஆகியவற்றுடன் சங்கத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். 

இதன் மூலம் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பெற்று விவசாயிகளும், பொதுமக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம் என்று கூட்டுறவு சங்கங்களிள் மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments