கோட்டைப்பட்டினத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!கோட்டைப்பட்டினத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் 17.7.2021 சனிக்கிழமை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட மருத்துவ சேவை அணி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 10 மணியளவில் கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் எம்.எஸ்.கே. சாலிஹ் தலைமை வகித்தார். கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் செயலாளர் எ.சரிப் அப்துல்லா, ஜிம் சரிப் அப்துல்லா, எம்.கே.சாஹிப் கனி, ஹாஜா முகைதீன் (குன,மீன) மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பிஎம்ஒ), மருத்துவர் செந்தில்ராம் சுகாதார ஆய்வாளர் சீனி மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டைப்பட்டினம் காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்கள் முகாமை துவக்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில மீனவர் அணி செயலாளர் ஜெகதை செய்யது அவர்கள் சிறப்புரையாற்றினார். கோட்டைப்பட்டினம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செவிலியர்கள், மருத்துவ குழுவினர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தினார்கள். இறுதியில் ஹாஜா முகைதீன் (செட்டி) நன்றியுரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் சமூகநீதி மாணவ இயக்க மாவட்ட துணைச்செயலாளர் நசீம் கான், தமுமுக-மமக நிர்வாகிகள், கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள் பெருமளவில் கலந்துக் கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments