கோபாலப்பட்டிணம் ஊர் மக்களின் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்!!


இந்தியாவில் துல்ஹஜ் பிறை 10 அன்று (21/07/2021) பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஹஜ் பெருநாள் 21/07/2021 புதன்கிழமை அன்று கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் காலை 6.30 மணிக்கு பயான் ஆரம்பிக்கப்பட்டு  மிகச்சரியாக 7.00 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதன் பிறகு குத்பா உரை, தூஆக்கள் செய்யப்பட்டது.

அதே போல் கோபாலப்பட்டிணம் கபூர் காம்பள்க்ஸ் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காலை 7: 30 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

இதில் ஊர் மக்கள், பெரியோர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், சகோதர, சகோதரிகள் என ஏறாளமானோர் கலந்து கொண்டு  தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாள் கொண்டாடினார்கள்.

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி  கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தியாகத்தை நினைவு கூறுக்கின்ற ஒரு திருநாளாகும்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments