காலணி இல்லாமல் நடந்து சென்ற சிறுவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பண உதவி

    
சிறுவர்களுக்கு காலணி வாங்க புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பண உதவி செய்தார்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள கவிதா ராமு, மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பொன்னமராவதி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். மேலும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஆய்வு செய்து விட்டு அப்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 சிறுவர்கள் சாலையில் காலணி இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தனர். 
இதைப்பார்த்த மாவட்ட கலெக்டர், அந்த 2 சிறுவர்களையும் அழைத்து பேசினார். அவர்களிடம் என்ன படிக்கிறீர்கள்?, உங்களுக்கு எந்த ஊர்? என்று பாசத்துடன் கேட்டு, காலணி இல்லாமல் எங்கு நடந்து போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். பின்னர் அந்த 2 சிறுவர்களுக்கும் பணம் கொடுத்து, காலணியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். 

மாவட்ட கலெக்டரின் இந்த செயல் அங்கு இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments