வழக்கில் சிக்கிய வாகனங்களை உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுச் செல்ல புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் அறிவுறுத்தல்!புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி உட்கோட்டங்களில் உள்ள புதுக்கோட்டை நகர காவல் நிலையம், திருக்கோகர்ணம் காவல் நிலையம், கணேஷ்நகர் காவல் நிலையம் மற்றும் அறந்தாங்கி காவல் நிலைய சரகங்களில் உரிமம் கோரப்படாத கேட்பார் அற்ற நிலையில் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வானங்கள் உள்ளன.

அதன்படி, புதுக்கோட்டை உட்கோட்ட காவல் நிலையங்களில் 154 இருசக்கர வாகனங்களும், 3 மூன்று சக்கர வாகனங்களும், 3 நான்கு சர வாகனங்கள் மற்றும் ஒரு லாரியும் உள்ளது. மேலும் அறந்தாங்கி உட்கோட்ட காவல் நிலையங்களில் 69 இருசக்கர வாகனங்களும், ஒரு நான்கு சர வாகனமும் உள்ளது. இவை அனைத்தும் குற்றவிசாரணை முறைச்சட்டம் பிரிவு 102 மற்றும் கிரிமினல் குற்றம் சார்ந்த வழக்குகளில் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வாகனங்களுக்கான உரிய உரிமைதாரர்கள் அந்த காவல் நிலையத்திற்கு சென்று, உரிய ஆவணங்களை காண்பித்து 15 தினங்களுக்குள் மீட்டுக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு 15 தினங்களுக்கும் மேலாக உரிமம் கோரப்படாத வாகனங்கள், பொது ஏலம் விடப்பட்டு அதில் கிடைக்கபெறும் தொகையானது அரசு கணக்கில் செலுத்தப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments