மாணவ, மாணவிகளே! பொருளாதார வசதியின்மை உங்களுக்கு ஆரம்பக் கல்வி/உயர் கல்வி பயில தடையாக உள்ளதா? கவலை வேண்டாம்!!



பொருளாதார வசதியின்மை காரணமாக ஆரம்பக் கல்வி/உயர் கல்வி பயில தடையாக உள்ள மாணவ, மாணவிகளுக்கு செய்யது அம்மாள் கல்வி உதவி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் ஆலோசனைகள் மற்றும் நிதி உதவி வழங்க உள்ளனர்.

இராமநாதபுரத்தில் டாக்டர் இ.எம். அப்துல்லா அவர்களால் துவங்கப்பட்டு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சார்ந்த சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் செய்யது அம்மாள் அறக்கட்டளை தற்போது பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவனால் கைவிடப்பட்டோர். கணவரை இழந்தோர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோரின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர்க்கல்வி வரை பயில நிதி உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்க செய்யது அம்மாள் கல்வி உதவி மற்றும் வழிகாட்டி மையம் துவங்கப்பட்டுள்ளது.

LKG முதல் பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு தகுதியின் அடிப்படையில் நிதி உதவிகள் வழங்கப்படும்.

நீங்கள் விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

1.ஆதார் கார்டு.

2. குடும்ப அட்டை.

3.ஆண்டு வருமானச் சான்றிதழ்.

4. மதிப்பெண் சான்றிதழ்.

5.புகைப்படம் - 3.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ராசி ஸ்கேன்ஸ் 2வது தளம்.
தலைமை தபால் நிலைய அலுவலக ரோடு, 
இராமநாதபுரம் -623501

தொலைபேசி எண்கள்:
78688 21984
99435 46569
98940 44944

இந்த தகவல்கள் யாருக்கேனும் உதவலாம். ஆகவே இந்த தகவலை பகிருங்கள்!!

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments