மீமிசல் ஊராட்சியில் புதிய தார் சாலை அமைப்பு!மீமிசல் ஊராட்சியில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஊராட்சியில் மீமிசல் கல்யாணராமர் கோவில் எதிரே  உள்ள கோபாலப்பட்டிணத்திற்கு செல்லும் சாலையில் (அரண்மனை தோப்பு ) வழியாக சுமார் ஒன்னரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதனால் அந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர். 

இந்த சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து மீமிசல் ஊராட்சி நிர்வாகம் கல்யாணராமர் கோவில் எதிரே உள்ள சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது.புகைப்படம் உதவி: சாதிக் பாட்சா, மங்களம் பேன்சி, மீமிசல்.
 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments