தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தை PFI அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


 தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தை PFI அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் .

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான பூர்வீக குடியிருப்புக்கு முன்பு உள்ள சாலை ஓரத்தில் உள்ள இடத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் சர்வாதிகாரப் போக்கில் அந்த இடத்தில் எந்தவிதமான முன்னறிவிப்பு இன்றி அதிகார போக்கில் அந்த  குடியிருப்புகளின் பாதையை தடுக்கும் நோக்கில்  சட்டத்திற்கு புறம்பான ஒரு அறிவிப்பு பலகையை கடந்த  (9/7/21) வெள்ளிக்கிழமை காலை ஊன்றி சென்றுள்ளார் அடக்குமுறைக்கு ஆளான பாதிக்கப்பட்ட நபர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் கரம்பக்குடி யூனிட் நிர்வாகிகளிடம் உதவி கேட்டதின் அடிப்படையில் நேற்று   (12/7/21) பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது முறையாக பதில் தராததால் அங்கு உடனடியாக அலுவலக முற்றுகை போராட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் நடத்தப்பட்டது காவல்துறையினர் சம்பந்தப்பட்டு நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சர்ச்சைக்குரிய அந்த அறிவிப்பு பலகையை அப்புறப்படுத்தியதை அடுத்து போராட்டம் நிறைவுற்றது..

 இதில் பாப்புலர் ஃப்ரண்டின் டிவிஷன் செயலாளர்கள் அபுபக்கர் சித்திக் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments