கோபாலப்பட்டிணத்தில் இ-சேவை மையம் வேண்டி பொதுநல சேவை சங்கம் சார்பில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரிடம் மனு!
கோபாலப்பட்டிணத்தில் இ-சேவை மையம் வேண்டி பொதுநல சேவை சங்கம் சார்பில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரிடம் மனு!

கோபாலப்பட்டிணம் பொதுநல சேவை சங்கம் சார்பில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் T.மனோதங்கராஜ் அவர்களிடம் இ-சேவை மையம் அமைக்க வேண்டி மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் புதிய இ-சேவை அமைக்க வேண்டி தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் T.மனோதங்கராஜ் அவர்களை தலைமை செயலகத்தில் நேரிடையாக சந்தித்து பொதுநல சேவை சங்கத்தின் உறுப்பினர் அப்துல் ஹமீது மனு அளித்தார். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
எங்கள் பகுதியில் இ-சேவை மையம் அமைக்க தாங்கள் உத்தரவு தருமாறு எங்கள் பகுதிவாழ் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். மேலும், எங்கள் பகுதியைச் சுற்றி பல கிராமங்கள் உள்ளது. தமிழ்நாடு அரசின் சலுகைகள் மற்றும் ஆவணங்கள் பெறுவதில் சிரமம் உள்ளது. எனவே, ஐயா அவர்கள் உடனே எங்கள் பகுதிக்கு இ-சேவை மையம் அமைத்து தருமாறு அன்புடன் பொது நல சேவை சங்கம் மூலமாக கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments