'மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும் முன்.. கொரோனா வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும்..' அமைச்சர் பொன்முடி
'மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும் முன்.. கொரோனா வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும்..' அமைச்சர் பொன்முடி

        வரும் செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்கள் அனைவரும் கொரோனா வேக்சின் போட்டுக் கொண்டு கல்லூரிகளுக்கு வர வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு பரவ தொடங்கியதிலிருந்தே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டே உள்ளன. இடையில் முதல் அலை குறைந்தபோது, சில காலம் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

    அப்போது கொரோனா 2ஆம் அலை தொடங்கியதால் கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. இப்போது 2ஆம் அலையும் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டன. கல்லூரிகள் திறப்பின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்தச் சூழலில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது. சென்னையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என மொத்தம் 112 கல்லூரி உள்ளன.

இதில் படிக்கும் அனைத்து மாணவர்களும் மாநகராட்சி மூலம் கொரோனா வேக்சின் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வேக்சின் போடும் பணி தொடர்ந்து நடைபெறும்


நீண்ட நாட்களுக்குப் பின்னர் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. இதனால் மாணவர்கள் அனைவரும் கொரோனா வேக்சின் போட்டுக் கொண்டு கல்லூரிகளுக்கு வர வேண்டும். கொரோனா ஒழிக்க அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் உயர் கல்வித்துறை உறுதுணையாக இருக்கும்" என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments