1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு


கொரோனா சூழல் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,கொரோனா சூழல் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அதன்படி,

1 முதல் இரண்டாம் வகுப்புக்கு – 50% பாடங்கள் குறைப்பு.

3 முதல் 4 ஆம் வகுப்பு வரை – 49% பாடங்கள் குறைப்பு.

5 ஆம் வகுப்புக்கு – 48% பாடங்கள் குறைப்பு.

6 ஆம் வகுப்புக்கு – 47 % வரையிலான பாடங்கள் குறைப்பு

7,8-ம் வகுப்பு வரை 40% – 50%  பாடங்கள் குறைப்பு.

9-ம் வகுப்புக்கு 38% பாடங்கள் குறைப்பு.

10-ம் வகுப்புக்கு 39% பாடங்கள் குறைப்பு.

11, 12-ம் வகுப்புகளுக்கு 35% – 40% பாடங்கள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments