புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம் ரத்து! மாவட்ட ஆட்சியர் தகவல்!!சுதந்திர தின விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டாம் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். 

அதன்அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. 

மேற்கண்ட தகவலை கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments