இந்தியாவில் இருந்து அமீரகம் வர கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் கிடையாது - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தகவல்






இந்தியாவில் இருந்து அமீரகம் வருகை தரும் குடியிருப்பு விசா பெற்ற விமான பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் கிடையாது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் இருந்து துபாய்க்கு வருகை புரியும் விமான பயணிகளில் துபாய் விசா பெற்றுள்ளவர்கள் கட்டாயம் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகார பொது இயக்குனகரத்தின் (ஜி.டி.ஆர்.எப்.ஏ) https://smart.gdrfad.gov.ae/Smart_OTCServicesPortal/ReturnPermitService.aspx என்ற இணையதள முகவரியில் நுழைவுக்கான அனுமதியை பெற்று இருக்க வேண்டும்.

துபாயை தவிர்த்து மற்ற பகுதிகளில் விசா பெற்று அமீரகத்துக்குள் வருகை புரியும் விமான பயணிகள் கட்டாயம் மத்திய அடையாளம் மற்றும் குடியுரிமை ஆணையத்தின் (ஐ.சி.ஏ) https://smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/registerArrivals என்ற இணையதளத்தில் பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும்.

இதில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சிக்கு வருகை தரும் அமைப்பாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மேற்கண்ட அரசுத்துறைகளிடம் இருந்து முன் அனுமதி பெறத்தேவையில்லை.

இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை க்யூ.ஆர் கோட் சான்றிதழுடன் எடுத்து வர வேண்டும். இந்திய விமான நிலையங்களில் எடுக்கப்படும் ரேபிட் கொரோனா பரிசோதனை முடிவுகளையும் கையில் வைத்திருக்க வேண்டும்.

அபுதாபி, ராசல் கைமா பகுதிகளுக்கு வருகை புரிபவர்கள் கட்டாயம் முறையே 12 மற்றும் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்பட வேண்டும். ராசல் கைமாவிற்கு வருகை புரிந்த 4-வது மற்றும் 8-வது நாளிலும், அபுதாபிக்கு வருகை புரிந்த 6-வது மற்றும் 11-வது நாளிலும் கட்டாயம் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதில் தற்போதைய விதிமுறைகளின்படி கொரோனா தடுப்பூசி குறித்த ஆவணங்கள் எதுவும் கட்டாயம் என குறிப்பிடவில்லை. எனவே இந்திய விமான நிலையங்களில் புறப்பாடு பகுதியில் தடுப்பூசி நிலை குறித்து பரிசோதனை செய்யப்படுவது இல்லை. மேற்கண்ட முக்கிய அனுமதி மற்றும் பிசிஆர் பரிசோதனை குறித்த ஆவணங்கள் மட்டும் கட்டாயம் பெற்று இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments