தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு ஒன்றிய அரசு விருது!



தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு ஒன்றிய அரசு விருது அளிக்கவுள்ளது.

2021-ம் ஆண்டில், காவல்துறையில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டதற்காக நாடு முழுவதும் இருந்து 152 போலீசார், ஒன்றிய உள்துறை மந்திரியின் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சி.பி.ஐ.யில் இருந்து 15 பேரும், மராட்டியம், மத்திய பிரதேசத்தில் இருந்து தலா 11 பேரும், உத்தரபிரதேசத்தில் இருந்து 10 பேரும், கேரளா, ராஜஸ்தானில் இருந்து தலா 9 பேரும், தமிழகத்தில் இருந்து 8 பேரும், பீகாரை சேர்ந்த 7 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் குஜராத், கர்நாடகா, டெல்லி மற்றும் இதர மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 28 பேர் பெண்கள் ஆவார்கள்.

சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டதற்காக தமிழகத்தில் இருந்து தேர்வான 8 போலீசாரின் விவரம் வருமாறு:-

8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்
* எம்.சரவணன் - நாகை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்.
* ஏ.அன்பரசி - திருவண்ணாமலை மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்.
* பி.கவிதா - கடலூர் மாவட்டம் புதுசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
* ஆர்.ஜெயவேல் - திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
* கே.கலைச்செல்வி - செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
* ஜி.மணிவண்ணன் - சென்னை கிழக்கு மண்டல புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்.
* பி.ஆர்.சிதம்பர முருகேசன் - சென்னை பூந்தமல்லி சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்.
* சி.கண்மணி - குமரி மாவட்டம் நாகர்கோவில் சிறப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்.

இந்த சிறப்பு விருது கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குற்றவியல் விசாரணையின் உயர் தொழில்முறை தரங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், விசாரணை அதிகாரிகளின் புலனாய்வு சிறப்பை அங்கீகரிக்கும் நோக்கத்துடனும் இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments