புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு பிரசாரம்: கலெக்டர் தலைமையில் உறுதி மொழியேற்பு!



ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில், உலக தாய்ப்பால் வார விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை வலியுறுத்தியும், கொரோனா விழிப்புணர்வு பற்றிய பாடலுக்கேற்ப கோலாட்ட நடன நிகழ்ச்சியை பார்வையிட்டார். பின்னர் உலக தாய்ப்பால் வார விழா உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர். 

பாலூட்டும் அனைத்து தாய்மார்களுக்கும், தாய்ப்பால் கொடுப்பதை தீவிரமாக ஆதரிக்கவும், பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும் அனைத்து முயற்சிகளையும் செய்யப்படும். தாய்ப்பால் தவிர பிற திரவங்கள் (மாட்டுப்பால், பால்பவுடர், தேன் சர்க்கரை தண்ணீர், கழுதைப்பால் மற்றும் பிற) தருவதை கடுமையாக எதிர்ப்பது, பிறந்த ஒருமணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடங்குவதற்கும், தோலுடன் தோல் தொடர்பு கொள்வதற்கும், அனைத்து தாய்மார்களும் ஆதரவளிப்பது, சாதாரண மற்றும் சிசேரியன் பிரசவங்களில் தாய்மார்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிப்பது ஆகிய உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
இந்த பிரசார வாகனம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி அரசு மகளிர் கலை கல்லூரி, புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், கோவில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நார்த்தாமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குன்றாண்டார்கோவில் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்துடன் நிறைவுப் பெறுகிறது. இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ரேணுகா, மாவட்ட தொழில் மைய மேலாளர் திரிபுர சுந்தரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments