தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு









தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன

கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதையொட்டி தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்புக்கு பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது வெளியிட்டிருக்கிறது.

அதில்,

கொரோனா பரவலை தடுக்க மாணவர்களை 6 அடி இடைவெளியில் அமரவைக்க வேண்டும்.

மாணவர்கள் கைகழுவும் வசதி, உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படும் கருவி ஆகியவை பள்ளிகளில் இடம்பெற வேண்டும்.

இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமரவைத்து பாடங்களை நடத்தலாம்.

முதல் நாளில் 50% மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50% மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும்.

கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments