ஆவுடையாா்கோவில் ஒன்றியக் குழு கூட்டம்!ஆவுடையார்கோவில் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவர் உமாதேவி தலைமையிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரப்பன், காமராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது.

கூட்டத்தில், தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அமரடக்கி சிவசங்கர், மீமிசல் ரமேஷ் ஆகியோர் பேசுகையில், கூட்டஅரங்கில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் படங்களுக்கு அருகில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெற்றுள்ளது. அவரது படத்தை எடுத்துவிட்டு கூட்டம் நடத்த வேண்டும் என்று பேசினர். 

அதற்கு, அ.தி.மு.க. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆவுடையார்கோவில் பாலசுந்தரி கூத்தையா, திருப்புனவாசல் பாண்டி ஆகியோர் எடப்பாடி பழனிசாமி படத்தை எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததுடன் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், எடப்பாடி பழனிசாமி படம் அகற்றப்பட்டதை தொடர்ந்து கூட்டம் தொடர்ந்து நடந்தது. 

அதனைத்தொடர்ந்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்து பேசினர். கூட்டத்தில் ஒன்றியப் பொறியாளர்கள், ஒன்றிய அலுவலர்கள், மின் வாரிய அலுவலர்கள், வேளாண்மைத் துறை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments