மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தில் செயல்படாத ஆதார் சேவை மையத்தால் பொதுமக்கள் அவதி!மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு தினந்தோறும் 100-க்கும் மேலான பொதுமக்கள் வந்து புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தல், பெயர் மாற்றம், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்து செல்கின்றனர். 

ஆனால், அந்த சேவை மையம் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக செயல்படாததால் பொதுமக்கள் தினந்தோறும் வந்து அவதிப்படுகின்றனர். 

ஆகவே, பொதுமக்களின் நலன்கருதி இந்த ஆதார் சேவை மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments