நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் மீதான பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் பஷீர் முகமது ஆகியோருக்கு எதிரான பிரச்சனைகளை விசாரித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மீமிசல் காவல் உதவி ஆய்வாளர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் உட்கோட்டம் மீமிசல் காவல் சரகம் நாட்டாணிபுரசக்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட நாட்டாணி, புரசக்குடி, கோபாலபட்டினம், ஆர்.புதுப்பட்டினம், கணபதிபட்டினம், முத்துக்குடா, பாதரக்குடி, கூடலூர், குறிச்சிவயல் ஆகிய கிராமங்கள் உள்ளன.

மேற்படி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக திருமதி சீதாலட்சுமி க/பெ முகமது பஷீர் என்பவர் இருந்து வருகிறார். மேற்படி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆர்.புதுப்பட்டினம், முத்துக்குடா கிராமங்களில் அடிப்படைத் தேவைகளான சாலைகள் சீரமைத்தல், குடிநீர், மின் இணைப்பு ஆகியவற்றை கேட்டு மேற்படி ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அதை அவர் செய்து தரவில்லை என்றும், 

மேலும் மேற்படி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பஷீர்முகமது என்பவர் தனது மனைவியின் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை துஷ்பிரயோகம் செய்து தான் ஒரு ஊராட்சி மன்ற தலைவரை போல அனைத்து செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார் எனவும் 

மேலும் மேற்படி கிராமங்களில் அனைத்து முக்கிய வேலைகளிலும் தனது உறவுக்காரர்களை வைத்தே செயல்படுவதால் கிராம மக்கள் பாதிப்பு அடைவதாகவும் எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்.புதுப்பட்டினம், முத்துக்குடா கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றாத ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் பசீர்முகமது ஆகியோர்களை கண்டித்து சாலை மறியலோ (அல்லது) ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ நடத்த இருப்பதாக நம்பகமான தகவல் மூலம் தெரிய வருகிறது. 

மேலும் மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சாலை மறியல் ஆர்ப்பாட்டம் போராட்டம் ஆகியவைகள் நடந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கனவர் பஷீர் முகமது ஆகியோருக்கு எதிரான பிரச்சனைகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments