கொரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப்பில் பெறலாம்... ஈஸியான வழி இதோ






வரவிருக்கும் நாட்களில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்க வாய்ப்புகள் இருப்பதால், அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இது உங்கள் ஆதார் அட்டையைப் போலவே முக்கியமானதாக இருக்கும்.

கொரோனா வைரஸ் பரவி ஒரு ஆண்டுக்கு மேலாக கடந்து விட்ட நிலையில் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை, டெல்டா வைரஸ் என பல்வேறு பெயர்களில் உருமாற்றம் அடைந்து வருகிறது. இது விரைவில் முடிவுக்கு வரம் என கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. COVID-19க்கு எதிரான தடுப்பூசி மட்டுமே தற்போது தற்காலிக தீர்வாக இருக்கிறது. இது நோயின் தீவிரத்தை குறைக்கிறது மற்றும் மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது. எனவே கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்து கொள்வது நல்லது.

வரவிருக்கும் நாட்களில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்க வாய்ப்புகள் இருப்பதால், அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இது உங்கள் ஆதார் அட்டையைப் போலவே முக்கியமானதாக இருக்கும்.

நீங்கள் கோவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ் எடுத்திருந்தால், உங்களால் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும். தற்போது இந்த சான்றிதழ் இருந்தால் தான் பல்வேறு மாநிலங்கள், நாடுகள் மற்றும் சுற்றுலா தளங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல தடுப்பூசி பெற்றுக்கொண்டால் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது. உங்கள் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே இவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.

உங்கள் தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்யக்கூடிய பல்வேறு தளங்கள் உள்ளன, ஆனால் எளிமையாக வாட்ஸ்அப் மூலம் உங்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

* கோவிட் தொடர்பான சான்றிதழ்களை பெற மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசு மை கவர்ன்மென்ட் கொரோனா ஹெல்ப் டெஸ்க் என்ற MyGov Corona Helpdesk வாட்ஸ்அப் சாட்போட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் இப்போது உங்கள் தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்க இந்த சாட்போட்டைப் பயன்படுத்தலாம்.

* MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் வாட்ஸ்அப் எண் +91 9013151515-ஐ உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேர்க்கவும்.

* வாட்ஸ்அப்பை திறந்து நீங்கள் சேவ் செய்த எண்ணின் சாட்டை திறக்கவும். பின்னர் நீங்கள் MyGov சாட் பக்கத்தை பெறுவீர்கள். அதில், நீங்கள் Download Certificate என டைப் செய்து அனுப்புங்கள்.

* நீங்கள் அனுப்பிய பின்னர் ​​வாட்ஸ்அப் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஆறு இலக்க OTP-ஐ அனுப்பும். (கோவிட் -19 தடுப்பூசிக்கான விண்ணப்பத்தில் நீங்கள் பதிவு செய்த எண்ணிலிருந்து செய்தி அனுப்பினால் உங்களுக்கு வசதியாக இருக்கும்).

* OTP வந்ததும் அதனை சாட் பக்கத்தில் அனுப்பவும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பெயரை ஒரே எண்ணில் பதிவு செய்திருந்தால், வாட்ஸ்அப் உங்களுக்கு நபர்களின் பட்டியலை அனுப்பும் மற்றும் தேர்வு செய்யும்படி கேட்கும்.

* நீங்கள் பதிவு செய்த நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒன்று, இரண்டு அல்லது மூன்று போன்ற விருப்பங்கள் உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் சான்றிதழ் பெற விரும்பும் சான்றிதழ் எண்ணை அதில் டைப் செய்து அனுப்பவும்.

* பின்னர் அந்த சாட்பாக்ஸ் உங்களுக்கு COVID-19 தடுப்பூசி சான்றிதழை அனுப்பும். நீங்கள் அதை உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யலாம்.

நீங்கள் ஒரு டோஸ் மட்டும் பெற்றிருந்தால் கூட அதற்கான சான்றிதழை உங்களால் பதிவிறக்கம் செய்ய முடியும். கோவின் ஆப் அல்லது ஆரோக்ய சேது செயலியில் இருந்தும் உங்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், உங்கள் கோவிட் -19 சான்றிதழை யாருக்கும் அனுப்ப வேண்டாம். ஏனெனில் அதில் உங்கள் தகவல் அனைத்தும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments