கொத்தடிமைகளாக ஓமன் நாட்டில் சிக்கிக்கொண்ட தமிழர்களை நாம் தமிழர் கட்சி மீட்பு.





கும்பகோணம் பகுதியை சேர்ந்த சிவா, ரங்கா, மயிலாடுதுறை ராஜசேகர், சீர்காழி சுரேஷ், தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் திருப்பதி ஆகியோர் ஒரு ஏஜென்ட் மூலம் ஏறக்குறைய ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட செலவு செய்து கடந்த டிசம்பர் மாதம் ஓமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளனர். அங்கு போய் பணியில் சேர்ந்த பிறகு தான் கொத்தடிமைகளாக தாங்கள் ஆக்கப்பட்டுள்ளோம் என்பதும், இரவு பகலாக தாங்கள் பார்க்கும் பணிக்கு ஊதியம் கிடையாது என்பதும் அவர்களுக்கு தெரியவருகிறது.

இதுகுறித்து கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களிடம் தங்கள் உறவினர் மூலம் கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான ராஜசேகரிடம் மேற்கண்டவர்கள் தெரிவிக்க, இதுபற்றிய தகவல் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மூலமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் நாம் தமிழர் கட்சியின் ஓமன் நாட்டு பிரிவான செந்தமிழர் பாசறைக்கு தகவல் தெரிவிக்க, செந்தமிழர் பாசறையின் பொறுப்பாளர்கள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுள்ள தமிழர்களை தங்களது சொந்த பொறுப்பில் மீட்டு
தாயகத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தாயகம் திரும்பிய ‌ பாதிக்கப்பட்ட 5 தமிழர்களும் இன்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், தாங்கள் இழந்த தொகையை மீட்டுத்தரக் கோரியும் இன்றைய தினம் என் அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள்.

இந்த நிகழ்வில் கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் மோ ஆனந்த், கும்பகோணம் மாநகரச் செயலாளர் கார்த்திகேயன், ராஜசேகர், தம்பி அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் கட்டிய பணத்தை மீட்கவும் நாம் தமிழர் கட்சி சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

தமிழர்கள் கொத்தடிமையாக பட்ட செய்தி தெரிந்தவுடன் விரைந்து செயல்பட்ட கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்கும், நாம் தமிழர் கட்சியின் ஓமன் நாட்டு பிரிவு செந்தமிழர் பாசறை பொறுப்பாளர்களுக்கும் தாயகம் திரும்பிய உறவுகள் தங்களது நன்றியை தெரிவித்தார்கள்.

நாம் தமிழர்.

வழக்கறிஞர் மணி செந்தில்,
நாம் தமிழர் கட்சி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments