அன்னவாசலில்தெரு விளக்குகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு
அன்னவாசலில் இருந்து சித்தன்னவாசல் செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை சித்தன்னவாசல் சாலை பரபரப்பாக இருந்த நிலையில் திடீரென மின்கம்பத்தில் இருந்த விளக்குகள் அனைத்தும் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் நின்றவர்கள் பயத்துடன் தெரித்து ஓடினர். பின்னர் அனைத்து விளக்குகளும் வெடிப்பதற்கான காரணம் குறித்து பார்த்தபோது உயர் அழுத்த மின்கம்பி செல்லும் பாதையில் தெருவிளக்கிற்கு செல்லும் மின் கம்பி உரசியதால் விளக்குகள் வெடித்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அப்பகுதியினர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கூறுகையில், மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக அப்பகுதியை பார்வையிட்டு உரிய வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளோடு உயர் அழுத்த கம்பிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறையான தொழில் நுட்பங்களை பின்பற்றாமல் மின்கம்பிகள் அமைந்திருப்பதுதான் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதற்கு காரணம். எனவே பொதுமக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள் செல்வதை உரிய பாதுகாப்பு வழிமுறைகளின்படி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments