புதுக்கோட்டையில் மாநில அளவிலான கால்பந்து போட்டி
புதுக்கோட்டையில் உசிலங்குளத்தில் தடிகொண்ட அய்யனார் திடலில் நேற்று மாநில அளவில் எழுவர் கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்பட மாநிலம் முழுவதும் இருந்தது 34 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தொடர்ந்து பரிசளிப்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. முதல் 3 பரிசு ரொக்கப்பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர் அணிகள் பரபரப்பாக மோதியன. கால்பந்து போட்டியை ரசிக்க ஏராளமான பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். ஆர்வமுடன் போட்டியை பார்த்து ரசித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments