அறந்தாங்கி அரசு கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதியம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இக்கல்லூரியில்  பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு கடந்த 3 மாத காலமாக  திருச்சி பாரதிதாசன் பல்கலைைகழகம் ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தற்காலிக கெளரவ விரிவுரையாளர் மற்றும் அலுவலக பணியாளர்களின் நிலைமையை  பல்கலைகழகத்துக்கு எடுத்துக் கூறும் வகையிலும் ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் கௌரவ விரிவுரையாளர்கள் அலுவலக பணியாளர்கள் கல்லூரிக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments