வங்கிகளுக்கு அக்டோபர் மாதம்21 நாட்கள் விடுமுறையா? : அதிகாரிகள் விளக்கம்




வங்கிகளுக்கு அடுத்த மாதம் 21 நாட்கள் விடுமுறையா என்பது தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வங்கிகளுக்கு அடுத்த மாதம் 21 நாட்கள் விடுமுறை என வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: அக்டோபர்மாதம் பல்வேறு பண்டிகைகள்வருவதால், நாடு முழுவதும் சில மாநிலங்களில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதன்படி, வங்கிகளுக்கு 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் வார விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி சனிக்கிழமை வருவதால், 2 மற்றும் 3-ம் தேதி விடுமுறையாகிறது.

இதையடுத்து, 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் ஆகும். 14-ம் தேதி வியாழக்கிழமை ஆயுத பூஜை, 15-ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி ஆகிய நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். 19-ம் தேதி மிலாடி நபி மற்றும் 23-ம் தேதி 4-வது சனிக்கிழமை மற்றும் 24, 31-ம் தேதி என மொத்தம் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொதுமக்களின் வசதிக்காக ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல செயல்படும். அத்துடன், ஏடிஎம் மையங்களில் போதிய பணம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

பொதுமக்களின் வசதிக்காக ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல செயல்படும். அத்துடன், ஏடிஎம் மையங்களில் போதிய பணம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments