கோபாலப்பட்டிணத்தில் வானம் மேகமூட்டத்துடன் மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 6-ந் தேதி வரை இடியுடன் கூடிய கனமழையும், கடலோர டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் 
தென்மேற்கு பருவமழை காலம் என்றாலும்  கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. செப்டம்பர் 04 இன்று மாலை 4.30 மணியளவில் இருந்து தீடிரென கருமேகங்கள் சூழ்ந்து குளு குளு கிளைமேடாக இருந்தது. மாலை 5.00 மணி அளவில்  
மழை பெய்ய தொடங்கியது.  தற்போது வரை இடியுடன் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.
மழையின் காரணமாக சாலையோரங்களிலும், வீடுகளிலும் மழைநீர்  தேங்கி நின்றது. 

மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments