புதுக்கோட்டை மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! கலெக்டர் கவிதா ராமு தகவல்!!



தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் புதுக்கோட்டை மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்ப General Turn (Priority) மட்டும் கீழ்க்காணும் தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அலுவலக உதவியாளர் பணிக்குத் தேவையான தகுதிகள்:
1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும், 

அலுவலக உதவியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் 01.07.2021ன்படி ஆதி திராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்கள்) மற்றும் பழங்குடி வகுப்பினர் குறைந்தபட்ச வயது 18-ம் அதிகபட்ச வயது 35 வயதிற்கு உட்பட்டும், மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) 32 வயதிற்கு உட்பட்டும், இதர வகுப்பினர் (மேற்கண்ட வகுப்பை சாராதவர்கள் 30 வயதும், சிறப்பு சலுகை உள்ளவர்கள் முன்னாள் இராணுவத்தினர், விதவைகள், போரில் கணவனை இழந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (எல்லா வகுப்பினர்களும் தகுதியுடையவர்கள்) நடைமுறையிலுள்ள விதிகளின்படி இருக்க வேண்டும்.

3.General Turn (Priority).

இப்பணியிடத்திற்கு ஊதியக்கட்டு ரூ.15100-50700 

மேற்காணும் தகுதியுடைய நபர்கள் தங்களது கல்விச் சான்றிதழ் குடும்ப அட்டை மற்றும் ஜாதிச்சான்று நகல் சான்றொப்பமிடப்பட்டது மற்றும் 2 புகைப்படங்கள் (பாஸ்போர்ட் சைஸ் போட்டோ) ஆகியவற்றுடன் கூடிய விண்ணப்பத்தினை 06.09.2021 முதல் 05.10.2021 முடிய அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மீன்வளத் துணை இயக்குநர் (மண்டலம்), 17/2 சமது பள்ளித்தெரு, காஜா நகர், திருச்சிராப்பள்ளி-620 020 என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments