ஜாதிமதம் பாராமல் செயல்படுவோம் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் பேச்சு!புதுக்கோட்டை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பணியேற்பு விழாவில் பங்கேற்று மரகன்றுகளை நட்டு வைத்து ஜாதிமதம் பாராமல் செயல்படுவோம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் பேச்சு.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பணியேற்பு விழா மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பா.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் கிரீன் முகம்மது, மாவட்ட செயலாளர் அகமது கான் ஆகியோர் முன்னிலையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன், மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாநில துணைத் தலைவர் இராஜாராம், தலைமை செயலாளர் மெஸ்மர்காந்தன், அமிர்தா வித்தியா விகாஸ் தாளாளர் பொன்.துரை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.


காரைக்குடி, திருவாரூர் மாதிரி ஓட்டத்தை விரைவு இரயிலாக இயக்கி சென்னை வரை நீட்டித்துதர வேண்டும்.அறந்தாங்கி சுற்று வட்ட சாலை விரைவில் அமைக்க வேண்டும். அறந்தாங்கியில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனையை விரிவுபடுத்தி நவீனப் படுந்தவேண்டும். அறந்தாங்கி பேருந்து நிலையத்தை விரிவு படுத்தவேண்டும், அறந்தாங்கியில் புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பகுதிகளில் சிறுவர் விளையாட்டு பூங்காக்களை அமைத்து தரவேண்டும் போன்ற தீர்மானங்களை மாவட்ட இணைச் செயலாளர் முனைவர் முபாரக் அலி முன்மொழிந்தார். கவிஞர் ஜீவி, ஐடியல் தாளாளர் சேக் சுல்தான், வழக்கறிஞர் வெங்கடேசன், மீனாட்சி நாச்சியார் தாளாளர் நாகராஜன் ஆகியோர் நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் மலையப்பன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் மாவட்ட துணை தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments