கட்டுமாவடி முதல் குமரப்பன்வயல் வரையுள்ள பேரிடர் மேலாண்மை கட்டிடங்களை ஆய்வு செய்த தாசில்தார்!கட்டுமாவடி முதல் குமரப்பன்வயல் வரையுள்ள பேரிடர் மேலாண்மை கட்டிடங்களை தாசில்தார் ஆய்வு செய்தார்.

மழைக்காலம் நெருங்குவதால் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள பேரிடர் கட்டிடம், புயல் பாதுகாப்பு கட்டிடம் போன்றவை நல்ல நிலையில் உள்ளதா என்பது குறித்து மணமேல்குடி தாசில்தார் ராஜா ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் கட்டுமாவடி முதல் குமரப்பன் வயல் வரையுள்ள பேரிடர் மேலாண்மை கட்டிடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். 

இந்த ஆய்வின் போது கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments