மாணவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதி: முள்ளங்குறிச்சி அரசு பள்ளி வழக்கம்போல் இன்று செயல்படும் என அறிவிப்பு!



கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கு கடந்த 2 நாட்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையொட்டி நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் 202 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான சளி மாதிரி சேகரிப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பட்டது.இதைதொடர்ந்து நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் முள்ளங்குறிச்சி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் 202 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி ஆனது. 

இதனால் பள்ளி இன்று (புதன்கிழமை) முதல் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையொட்டி நேற்று முள்ளங்குறிச்சி அரசு பள்ளியில் கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments