ஆவுடையார்கோவிலில் தமிழக சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்!ஆவுடையார்கோவிலில் தமிழக சத்துணவு ஊழியர் சங்க கூட்டம் ஒன்றிய முன்னாள் செயலாளர் செல்லக்கண்ணு தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய தலைவராக ஆர்.சேவுகப்பெருமாள், செயலாளராக வீ.குமாரராஜா, பொருளாளராக மரிய ரோஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

கூட்டத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசிற்கும், முதல்-அமைச்சருக்கும், நன்றி தெரிவித்தும், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் அய்யனார் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments