கோட்டைப்பட்டினம் இளைஞர்களால் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகோட்டைப்பட்டினம் இளைஞர்களால் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் இளைஞர்களால் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அணியும், இரண்டாம் பரிசு ரூ.8 ஆயிரத்தை கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அணியும், மூன்றாம் பரிசு ரூ.6 ஆயிரத்தை கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அணியும் பெற்றனர். 

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது. போட்டியை திரளான பொதுமக்கள் மற்றும் கால்பந்து ரசிகர்கள் கண்டு களித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments