புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் பழமை வாந்த ஆலமரம் இருந்து வந்தது. இந்த ஆலமரம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிழல் தரக்கூடியதாக இருந்தது. அது இன்று 07/09/2021 செவ்வாய் 1.40 pm மணியளவில் அருகே உள்ள மின்கம்பியில் சரிந்து விழுந்தது. இதில் அதிஷ்ட வசமாக யாருக்கும் எந்த பதிப்பு இல்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் காற்று எதுவும் அடிக்காத நிலையில் மரம் சாய்ந்து விட்டது. மேலும் வேர் பகுதி பலம் இழந்து விட்டதால் மரம் சாய்ந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் அவுலியா நகருக்கு வருவோரை வரவேற்கும் வண்ணமாக கம்பீர தோற்றத்துடன் காணப்பட்டு வந்த மரம் வீழ்ந்திருப்பதை அப்பகுதி மக்கள் கவலையோடு பார்த்து செல்கின்றனர்.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் இந்த ஆலமரத்தின் கீழ் தான் கிராமசபை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
![]() |
நேற்று வரை கம்பிரம்மாக காட்சியளித்து வந்த ஆலமரம் (புகைப்படம் எடுத்த நாள் 06.09.2021) |
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.