நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி சார்பில் கோபாலப்பட்டிணத்தில் நாளை செப்.8 இலவச கொரோனா தடுப்பூசி முகாம்!கோபாலப்பட்டிணத்தில் நாளை 08.09.2021 புதன்கிழமை கொரோனா இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மற்றும் மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நாளை புதன்கிழமை (08/09/2021) காலை 9.30 மணி முதல் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.

இடம்: கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல்

நேரம்: காலை 9.30 மணி முதல்

தேதி: 08.09.2021 புதன்கிழமை

இந்த முகாமில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலபட்டிணத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தவறாது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனா நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டி ஊராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைவரும் தடுப்பூசி செலுத்த வரும் பொழுது தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும் படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள் வரும்போது பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தகவல்: சாதிக் பாட்ஷா, 7-வது வார்டு உறுப்பினர் கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments