மணமேல்குடியில் ஒன்றியக்குழு கூட்டம்!மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைவர் பரணிகார்த்திக்கேயன் தலைமை தாங்கினார். ஆணையர் வீரப்பன், ஒன்றியக்குழு துணை தலைவர் சீனியர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து ஒன்றிய குழு உறுப்பினர்களின் விவாதங்கள் நடைபெற்றது. 

கூட்டத்தில் தலைவர் பரணிகார்த்திகேயன் மணமேல்குடி ஒன்றியத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க புதிய துணை மின் நிலையம் அமைக்க அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் கிராம சாலைகளை நெடுஞ்சாலைத்துறையுடன் இணைக்கும் முடிவு குறித்து விவாதம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வன் உள்பட அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments