கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவி! கோபாலப்பட்டிணத்தில் வேகத்தடைக்கு பொது நலன் கருதி வண்ணம் பூசிய GPM மீடியா!!



கோபாலப்பட்டிணத்தில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு அதில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையை எளிதில் அடையாளம் காணும் வகையில் வண்ணம் பூசவோ, அறிவிப்பு பலகையோ அல்லது ஒளிரும் விளக்குகளோ அமைக்க வேண்டி ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் ஊராட்சி நிர்வாகம் அதை ஏற்கவில்லை.இதனால் GPM மீடியா சார்பில் பொது நலன் கருதி நேற்று 21.09.2021 இரவு வண்ணம் பூசும் பணி நடைபெற்றது.
 
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கோபாலப்பட்டிணத்திற்கு செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. கோபாலப்பட்டிணத்தில் இருந்து மீமிசல் செல்வதற்கும், வெளியூரில் இருந்து கோபாலப்பட்டிணம் கடற்கரை பகுதிக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. இந்த சாலையானது கடந்த 8 மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பாக புதிதாக போடப்பட்டு ஐந்து முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகன ஓட்டிகள் இதனை எளிதில் அடையாளம் காணும் வகையில் வண்ணம் பூசவோ, அறிவிப்பு பலகையோ, ஒளிரும் விளக்குகளோ இல்லை.

இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல், அடிக்கடி விபத்தில் சிக்கினர். குறிப்பாக, வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. 

இந்தவேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசாததால் வேகத்தைடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் கடப்பதால் விபத்தில் சிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. 

ஆகவே விபத்தை தடுக்கும் விதமாக GPM மீடியா சார்பில் பொது நலன் கருதி வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூச்சு அடிக்கப்பட்டது.


இந்த வண்ணம் பூசும் பணியை கோபாலப்பட்டிணம் ஜம்ஜம் தெருவை சேர்ந்த அப்துல்லா, அவுலியா நகர் பகுதியை சேர்ந்த முகமது காசிம் மற்றும் மக்கத் ஆகியோர் மேற்கொண்டனர். இந்த பணியை திறம்பட செய்து முடித்த மூவருக்கும் GPM மீடியா சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...




Post a Comment

0 Comments