கோபாலப்பட்டிணத்தில் புதிதாக போடப்பட்ட சாலையில் அறிவிப்பு பலகை, ஒளிரும் விளக்கு இல்லாததால் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் வேகத்தடை: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!!கோபாலப்பட்டிணம் நுழைவாயில் - கடற்கரை சாலையில் விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள வேகத்தடை குறித்து அறிவிப்பு பலகை, ஒளிரும் விளக்கு ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கோபாலப்பட்டிணத்திற்கு செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. கோபாலப்பட்டிணத்தில் இருந்து மீமிசல் செல்வதற்கும், வெளியூரில் இருந்து கோபாலப்பட்டிணம் கடற்கரை பகுதிக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. 

இந்த சாலையானது கடந்த ஒரு மாத்திற்கு முன் நெடுச்சாலை துறை சார்பாக புதிதாக போடப்பட்டு ஐந்து முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகன ஓட்டிகள் இதனை எளிதில் அடையாளம் காணும் வகையில் வண்ணம் பூசவோ, அறிவிப்பு பலகையோ, ஒளிரும் விளக்குகளோ இல்லை.

இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதியில் வேகத்தடை உள்ளது என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், வேகத்தடை மீது வெள்ளை வண்ணத்தில் கோடு அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே விபத்து நடைபெறுவதற்கு முன் ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments