கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி வினா வெளியீடு!கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் நடைபெறும் இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான கேள்விகள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே கேள்விகளை பதிவிறக்கம் (Download) செய்து சரியான விடையை எழுதி பரிசுகளை வெல்லுங்கள்.
 
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, தாய்மார்களே சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் இடையூறுகளும் அதற்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளையும் விளக்கும் வகையில் 
இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை 24.09.2021 அன்று மாலை 4 மணியளவில் கோபாலப்பட்டிணம் தங்கமஹால் திருமண மண்டபத்தில் சகோதரி. ஆசிரியை சபரிமாலா அவர்கள் (சமூக செயற்பாட்டாளர்) பங்கு பெறும் சமூக விழிப்புணர்வு அரங்கக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. குறிப்பு:
*இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் கலந்து கொள்ள பெண்களுக்கு மட்டுமே அனுமதி.

*இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் அதிகமான நபர்கள் சரியான பதிலளிக்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல் மூன்று நபர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளையும் (பரிசு தொகை மற்றும் பொருள்) வழங்கி கவுரவிக்கப்படும்.

*கேள்விகள் இத்தோடு (PDF) வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

*பதில்-A4 தாளில் வினா எண்ணை எழுதி அதற்கான பதிலை மட்டும் அருகில் எழுதினால் போதுமானது. (எடுத்துக்காட்டு. 1.இஸ்லாம், 2.மதீனா)

*பதில் எழுதிய தாளில் தங்களது பெயரையும் தகப்பனார் பெயரையும் மற்றும் தகப்பனாரின் தொடர்பு எண்ணை தெளிவாக எழுத வேண்டும்.

*ஒரு நபர் இரண்டு முறை பதில் எழுதி அனுப்புவார்களின் விடை தாள் நிராகரிக்கப்படும்.

*விடை தாள்களை இணைத்து இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை 24.09.2021 மாலை 3.15 முதல் 4.15 மணிக்குள் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தின் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பதில் பெட்டியில் போட்டுவிட வேண்டும்.

*பேச்சாளரின் சிறப்புரை முடிந்தவுடன் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கொளரவிக்கப்படும்.

இந்த அருமையான நிகழ்வில் அனைத்து சகோதரிகளும், தாய்மார்களும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறது.
என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் அறக்கட்டளை
கோபாலப்பட்டிணம்.

என்றும் சமூக பணியில்..... 
என்றும் உதவும் கரங்கள் இளைஞர்கள்
கோபாலப்பட்டிணம். 
8681815683,8124150046,8946061415

கேள்விகள்:

1.அல்லாஹ் படைப்பினங்களை  எதற்காக  படைத்தான்?

2.அல்லாஹ் மனிதனை எதைக்கொண்டு படைத்தான்?

3.மனிதனின் எந்த  செயலுக்காக  அல்லாஹ் மிக மகிழ்ச்சி அடைக்கிறான்?

4.அல்லாஹ் தன் கையால் படைத்த       அதாமுக்கு ஸஜ்தா செய்ய சொன்ன போது  செய்ய மறுத்தவன் யார்?

5.ஆரம்பத்தில் அல்லாஹ்வுடைய அர்ஷ் எதன் மீது  இருந்தது?

6.அல்லாஹ் எதை மன்னிக்கவே மாட்டான்?

7.அல்லாஹ்வுக்கு பிள்ளை என நினைத்து யூதர்கள் வணங்கியது யாரை?

8.அல்லாஹ்வை மறுமையில் பார்க்க முடியாமல் தடுக்கப் படுப்பவர்கள் யார்?

9.அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது என்று  கூறியவர்கள்  யார்?

10.இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும் ஏன்பதற்காக தவிர இவற்றை நாங்கள் வாங்கவில்லை என்று கூறியவர்கள் யார்?

11.அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் மரணித்த மனிதர்கள் நிரந்தரமாக நரகத்தில்   தாங்குவார்களா?

12.அல்லாஹ்வுடைய பொருத்தம் யாருடைய பொருத்தத்தில் உள்ளது?

13.அல்லாஹ் படைப்பினங்களை படைப்பதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் விதியை  எழுதினான்?

14.இந்த உலகத்தில் ஒன்று நடப்பதற்கு முன் அதை பற்றிய அறிவு அல்லாஹ்விற்கு இருக்கிறதா இல்லையா?

15.நம்மையும் நமது செயல்களையும் படைத்தவன் யார்?

16.விதி என்பது  கிடையாது என்று மறுத்த வழிக்கெட்ட  கூட்டம் யார்?

17.விதியின் கீழ் நாம் நிர்பந்தப்பட்டிருக்கிரோம் என்று கூறிய  வழிக்கெட்ட  கூட்டம் யார்?

18.பாவி தன் பாவச்செயலுக்கு விதியை ஆதாரம் காட்டலாமா?

19.எல்லாம் அல்லாஹ்வின் விதி படிதான் நடக்கும் என்று இருக்கும் போது  மனிதன் தான் விரும்பியதை  தேர்வு செய்ய  சுதந்திரம் உடையவானா இல்லையா?

20.விதியை பற்றி அதிகமாக சிந்திப்பது கூடுமா கூடாதா?

21.மலக்குகளை  அல்லாஹ் எதைக்கொண்டு படைத்தான்?

22.வானத்தில் மலக்குகள் தொழும் மஸ்ஜிதின் பெயர் என்ன?

23.நரகத்தில் கெட்ட மனிதர்களையும் ஜின்களையும் வேதனை செய்வதற்காக அல்லாஹ் எத்தனை மலக்குகளை  ஏற்பாடு செய்து இருக்கிறான்?

24.நரகத்தின்  காவளாலியின் பெயர் என்ன?

25.மலக்குகள் ஏது உள்ள வீட்டிக்கு வரமாட்டார்கள்?

26.ஜிப்ரில் (அலை ) மனித உருவத்தில் வரும் போது எந்த சஹாபியின் ஒத்த தோற்றத்தில் இருப்பதாகா நபியவர்கள் சொன்னார்கள்?

27.இரண்டு சூர் ஊத்துவதற்கு பொறுப்புக்கொடுக்கபட்ட  மலக்கு யார்?

28.யூதர்கள் தங்களுக்கு விருப்பமான மலக்கு என்று யாரை கூறினார்கள்?

29.கெட்டவர்களின் உயிரை கைப்பற்றும்பொழுது மலகுள் மவுத்தின் முகம் எப்படி இருக்கும்?

30.ஜிப்ரில் (அலை ) அவர்களை அசல் தோற்றத்தில் நபியவர்கள்  எத்தனை முறை பார்த்தார்கள்?

31.ஜின்களின் உணவு என்ன?

32.வானத்தில் ஒட்டு கேட்க செல்லும் ஜின்களுக்கு என்ன காத்துஇருக்கும்?
33.ஜின்களுக்கு நபி யார்?

34.சைத்தான் எந்த இணைத்தை சார்த்தாவன்?

35.ஜின்களுக்கு மறைவான ஞானம் உண்டா ?

36.அல்லாஹ் தனது பேச்சாகிய அல்குரானை  நபியவரகளுக்கு எத்தனை ஆண்டு இறக்கினான்?

37.அல்லாஹ் இறக்கிய அல்குரானுக்கு  முன்புள்ள வேதங்களின் சட்டத்தை பின்பற்றலாம்மா?

38.நபி மூஸா (அலை ) அவர்களுக்கு தவ்ராத் வேதத்தை அல்லாஹ் எதில் எழுதி கொடுத்தான்?

39.தாவுத் (அலை ) அவர்களுக்கு கொடுக்க பட்ட வேதம் என்ன?

40.குரானில் ஓதல் மற்றபட்ட  வசனம் இருப்பதுபோல் சட்டம் மற்றபட்ட வசனம் உண்டா?

41.குரான் எந்த குலத்துடைய  மொழி வழக்கில் இறங்கியது?

42.குரானை ஒன்று திரட்ட அபூபக்கர் (ரலி ) நியமித்த சஹாபியின் பெயர் என்ன?

43.நாம் ஓதும் குரானின் எழுத்து  எந்த  காலத்து ஏழுத்து?

44.குரானில் ஏழுத்து பிழை உண்டா?

45.குரான் எத்தனை வட்டார மொழி வழக்கில் இறங்கியது?

46.இரண்டு இஸ்லாமிய மூலதாரங்களில் இரண்டாவது ஆதாரம் என்ன?

47.நபியவர்களின்  சொல், செயல், அங்கிகாரத்தை  ஏன்னவென்று  சொல்வார்கள்?

48.நாம் யாரை பின்பற்றினால் அல்லாஹ் நம்மை நேசிப்பான் மேலும் நமது பாவத்தை மன்னிப்பான்?

49.ஸஹீஹ் புஹாரிக்கு இமாம் புஹாரி வைத்த பெயர் என்ன?

50.ஸஹீஹ் முஸ்லீம்க்கு  ஏழ்த்தப்பட்ட அல் மின்ஹஜ்  என்ற  விரிவுரையின் ஆசிரியர் யார்?

51.தனக்கு கொடுக்கப்பட்ட நீதிபதி பொறுப்பை ஏற்க மறுதற்க்காக சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே மரணித்த இமாம் யார்?

52.இமாம் மாலிக்கின் பிரசித்திபெற்ற  மாணவராக இருந்த இமாமின் பெயர் என்ன?

53.அல்லாஹ்வின் தூதற்கு பிறகு இந்த உலகிதிலேயே  சிறந்த  மனிதர் யார்?

54.நபியின் ரகசிய  தோழர்  என்று அழைக்கப்படும் சஹாபியின் பெயர்  என்ன?

55.அதிகமாக  ஹதீஸ் அறிவித்த சஹாபியபெண்  யார்?

56.ஹதீஜா (ரலி ) அவர்கள் அறிவித்த ஹதீஸ் எத்தனை?

57.நபியர்வைகளை  சந்தித்து இஸ்லாத்தை ஏற்று இஸ்லாத்தில் மரனிக்காதவரை  சஹாபி என்று  சொல்லலாமா?

58.நபியவர்களுக்கு பிறகு நபித்துவதில்லானா ஆட்சி எத்தனை ஆண்டு நடக்கும் என நபியவர்கள் கூறினார்கள்?

59.மக்கள் எல்லாம் ஒரு பாதையில்  செல்ல நீங்கள் ஒரு பாதையில் சென்றால் உங்களது பாதைலயே நானும் செல்வேன் என்று நபியவர்கள் யாரை பார்த்து சொன்னார்கள்?

60.நபியவர்களின் வளர்ப்பு மகனின் மகன் பெயர் என்ன?

61.நபியவர்களுக்கு மொத்தம் எத்தனை மனைவிமார்கள்?

62.நபியவகளின் மகன் இப்ராஹிமின் தயார் பெயர் என்ன?

63.நபியவர்கள் மனைவிமார்கள் நமக்கு யார்?

64.நபியவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?

65.நபியவர்களின் பேத்தி பெயர் ஒன்றை  கூறுக?

66.நபியவர்களின்  மகள்களானா ருகையா, உம்முக்குல்சும்  இருவரையும் ஒருவர் பின் ஒருவராக நபியவர்கள் யாருக்கு மனம் முடித்து வைத்தார்கள்?

67.நபியவர்கள் ஹிஜ்ரி எத்தனயாம் ஆண்டு இறந்தார்கள்?

68.நபியவர்கள் ஏன் வீட்டில் அடக்கம் செய்ய பட்டார்கள்?

69.நபியவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதம் என்ன?

70.நபியவர்களுக்கு எதில் விஷம் வைக்க பட்டது?

71.மறுமையில்  முதலில் எந்த நபி சிபாரிசு செய்வார்கள்?

72.மறுமையின் ஒருநாள் எத்தனை  ஆண்டுக்கு சமம்?

73.மறுமையில் மனிதன் முதலில் ஏது குறித்து விசாரிக்க படுவான்?

74.மறுமையில் சிராத்  எனும் பாலம் எதன் மீது  போட படும்?

75.சிராத் பாலத்தின் இரு ஓரத்திலும் என்ன நிற்கும்?

76.சிராத்  பாலத்தை  கடந்த  முஸ்லிம்கள் அடுத்து கன்தரா  எனும் பாலத்தில் ஏன் நிறுத்தி வைக்கப்படுவார்கள்?

77.நரகத்தில் இருந்து விடுதலையாகி சொர்க்கத்திற்கு செல்லும் மக்களை எப்படி  அழைப்பார்கள்?

78.மார்க்கத்தில் புதுமையான  காரியத்தை உண்டாக்கியவர்  மறுமையில் எதில் இருந்து நீர் அருந்த தடுக்க  படுவார்கள்?

79.மறுமையில் தனது ஏடு  யாருக்கு வலது கையில் கொடுக்க படும்?

80.மறுமையில் அல்லாஹ் யாருக்கு திரை போட்டு விசாரிப்பான்?

81.நபியவர்கள் கண்ணேருலிருந்து எந்த  சூராவை கொண்டு பாத்துப்பு தேடுவார்கள்?

82.நபியாவர்களுக்கு ஒரு யூதன் சூனியம் வைத்த போது அதிலிருது    விடுபட அல்லாஹ்வை பிராத்தித்த  நபியவர்கள் அந்த சூனியத்தை ஒரு கிணத்திலிருந்து எடுத்து போது அதை பிரித்தார்களா  இல்லையா?

83.இஹ்சான்  என்றால் என்ன?

84.மறுமையின் பெரிய அடையாளங்கள் எத்தனை?

85.கெண்டைகாலை  விட்டு திரை அகலும் நாளில் அல்லாஹ்விற்கு ஸஜ்தா செய்ய முடியாமல் முதுகு பலகைப்போல் ஆவது யாருக்கு?

86.சொர்க்கத்தின் மண் ஏதானால் ஆணவை?

87.சொர்க்கத்தில் உயர்ந்த இன்பம் ஏது?

88.சொர்க்கத்தின் வாசல் முதலில் யாருக்கு திறக்க  படும்?

89.சொர்க்கத்திற்கு எத்தனை வாசல் உண்டு?


90.சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு ஏது?

91.கணவனின் சொத்தில் பிள்ளை இருக்கிறப்பொழுது மனைவிக்கு எத்தனை  பங்கு கிடைக்கும்?

92.மனைவியின் சொத்தில் பிள்ளை இல்லாத பொழுது கணவனுக்கு எத்தனை பங்கு கிடைக்கும்?

93.அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகிறானோ அவருக்கு எதில் விளக்கத்தை கொடுப்பான்?

94.தன்னுடன் சம்மந்த  பட்ட மார்க்க கல்வியை படிப்பது ஒரு முஸ்லிமின் மீது கடமையா?

95.நன்மையை ஏவி தீமையை தடுப்பது ஒரு குழுவின் மீது கடமையா அல்லது  ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையா?

96.மனக்கேடான காரியத்தை விட்டும் தடுக்கும் என அல்லாஹ் எதை கூறினான்?

97.மார்க்கத்தில் தொழுகையின் அந்தஸ்து உடம்பில் எதை போன்றது?

98.பெண்கள் பள்ளியில் தொழுவது சிறந்ததா அல்லது வீட்டில் தொழுவது சிறந்ததா?

99.அல்லாஹ்வுக்கு இணைவித்தால் நமது அணைத்து அமல்களும் என்னவாகும்?

100.நாம் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் மரனித்தால்  அல்லாஹ் நமக்கு எதை தருவான்?

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments