மணமேல்குடி ஆற்றுப்பாலங்களில் தூர்வாரும் பணி!மணமேல்குடி பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பாலங்கள் தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது.

இந்த பணியை உதவி கோட்டப்பொறியாளர் சுந்தர்ராஜ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. பருவமழை ஆரம்பமாக இருப்பதால் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆற்றுப்பாலங்களின் அடியில் குவிந்திருக்கும் மணல்கள், குப்பைகள், செடி, கொடிகளை அகற்றி தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. 

பணியை உதவிப்பொறியாளர் வீரமுத்து, சாலை ஆய்வாளர் காளிமுத்து உள்பட சாலை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments