GPM மீடியா செய்தி எதிரொலி: நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் அக்டோபர் 2 கிராமசபை குறித்து அறிவிப்பை வெளியிட்ட ஊராட்சி நிர்வாகம்!



ஆண்டுக்கு நான்கு முறை (ஜன 26,மே 1,ஆக 15,அக் 2) கிராம சபை கூட்டங்கள் கூட்டி ஆக வேண்டும், அதனடிப்படையில் வருகிற அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராமசபை நடத்தப்பட வேண்டும்.

கிராம சபை கூட்டங்கள் குறித்தான தகவல்களை அ.ஆ. நிலை எண் 150 ஊ.வ.துறை (சி1) நாள். 17.07.1998  தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, ச.பி.3) படி அந்தந்த ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களிடம் ஒரு வாரத்திற்கு முன்னரே ஊராட்சி நிர்வாகம் அறிவிப்புகளை தெரிவிக்க வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது விதி ஆகும்.

அதனடிப்படையில் கிராம சபை கூட்டம் நடைபெற இன்னும் ஐந்து (அக்.2) நாட்களே இருக்கும் நிலையில் கூட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் ஊராட்சியில் வெளியிடாதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆகவே உடனடியாக கிராம சபை கூட்டம் குறித்தான தகவல்களை கிராம பொதுமக்களுக்கு தெரிவித்து ஒலி பெருக்கி மற்றும் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது என கடந்த 27.09.2021 அன்று GPM மீடியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் GPM மீடியா செய்தியின் எதிரொலியாக நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம் கிராமசபை குறித்த அறிவிப்பை இன்று 30.09.2021 துண்டு பிரசுரம் அடித்து அதில் நடைபெறும் இடம், நேரம் மற்றும் கூட்டப்பொருள்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கிராம சபை கூட்டங்கள் குறித்தான தகவல்களை அ.ஆ. நிலை எண் 150 ஊ.வ.துறை (சி1) நாள். 17.07.1998  தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, ச.பி.3) படி அந்தந்த ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களிடம் ஒரு வாரத்திற்கு முன்னரே ஊராட்சி நிர்வாகம் அறிவிப்புகளை தெரிவிக்க வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது விதி இருக்கும் நிலையில் கூட்டம் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னர் தான் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது.  மேலும் நாளை மறுநாள் நடைபெற உள்ள கிராமசபை குறித்து துண்டு பிரசுரம் அடித்து நாளை வீடுகளுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிராமசபை குறித்த அறிவிப்புகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடையாது. இதனால் ஏராளமான மக்கள் கிராமசபையில் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொள்ள முடிவதில்லை என தெரிவித்தார்.

மேலும் கொரோனா காரணமாக கிராமசபையை 10 மணிக்கு தொடங்கப்பட்டு 1 மணிக்குள் முடிக்க வேண்டும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் 11 மணிக்கு கிராமசபை நடைபெறும் என ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இப்படி நடைபெற்றால் ஊராட்சி சார்ந்த கூட்டுப்பொருளை சரியான முறையில் விவாதிக்க முடியாது என்பது கவலைக்குரியதாக உள்ளது.

மேலும் வரக்கூடிய காலங்களில் கிராமசபை குறித்து அரசு சொல்லி இருக்கும் அறிவிப்பின்படி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களிடம் ஒரு வாரத்திற்கு முன்னரே ஊராட்சி நிர்வாகம் அறிவிப்புகளை தெரிவிக்க வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments