வேலைவாய்ப்பு பதிவுக்கு இன்று (அக்டோபர் 4) முதல் 10-ம் வகுப்பு தகுதியை பள்ளியிலேயே பதிவு செய்யலாம்: வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் அறிவிப்பு
10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சிபெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் படித்தபள்ளியிலேயே வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் இணையதளத்தில் பதிவுசெய்து அடையாள அட்டை பெற அரசு வழிவகை செய்துள்ளது. இதன்மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில்வரவேண்டிய அவசியம் இல்லாததால் போக்குவரத்து செலவு, கால விரயம், தேவையற்ற அலைச்சல், கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்.

கடந்த 2020-21 கல்வி ஆண்டில்10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் 4-ம் தேதி (இன்று) வழங்கப்படுகிறது. இதையடுத்து, 4-ம் தேதி முதல்18-ம் தேதி வரை ஒரே பதிவுமூப்பு தேதி வழங்கி அவரவர் பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுநடைபெற பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றமாணவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளியை அணுகி பதிவுசெய்துகொள்ளலாம். பதிவு மேற்கொள்ளும்போது மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுவது உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

சிபிஎஸ்இ மாணவர்கள் தங்கள்கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் இணையதளத்தில் (https://tnvelaivaaippu.gov.in) தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments