இனி கட்டணம் பற்றி கவலை வேண்டாம்! கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-வது முதல் 5-ஆம் வகுப்பு வரை (தமிழ் & இங்கிலீஷ் மீடியம்) மாணவர் சேர்க்கை!!கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை 2021-2022 கல்வி ஆண்டிற்கான தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் பயில மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பெற்றோர்கள் கவனத்திற்கு... உங்கள் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதால் பணம் கொடுத்து படிக்க வைக்க முடியாத கவலையா? கவலையை விடுங்கள் இன்றே சேர்த்திடுங்கள் கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உங்கள் பிள்ளைகள் விரும்பும் மொழியில் தமிழ் வழி அல்லது ஆங்கில வழியில் (இங்கிலீஷ் மீடியம்) படிக்கலாம். 

  • தனியார் பள்ளியில் TC வாங்காமல் அரசு பள்ளியில் நேரடியாக சேர்க்க! 
  • கட்டணம் இல்லாமல் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க! மாதக்கட்டணம் இல்லாமல் தொடர்ந்து படிக்க!
  • கட்டணம் இல்லாமல் பாடப்புத்தகம் கிடைக்க!
  • கட்டணம் இல்லாமல் நோட்டுகள் கிடைக்க!
  • கட்டணம் இல்லாமல் எழுது பொருட்கள் கிடைக்க! கட்டணம் இல்லாமல் மதிய உணவு கிடைக்க!
  • கட்டணம் இல்லாமல் 4 செட் சீருடை (யூனிபாம்) கிடைக்க!
  • கட்டணம் இல்லாமல் ஸ்கூல் பேக் கிடைக்க!
  • கட்டணம் இல்லாமல் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிட!
  • ஆண்டுக்கு ரூபாய் 1000/- கல்வி உதவித்தொகை கிடைக்க!
உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்.

இப்படிக்கு...
தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள்,
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,
கோபாலப்பட்டிணம் - 614621
ஆவுடையார்கோவில் தாலுகா.
புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புக்கு...
9942639708

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments