கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம்-மீமிசல் சாலையில் எரியாத தெரு விளக்கை சரி செய்த ஊராட்சி மன்ற நிர்வாகம்!!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பகுதி மக்கள் மீமிசல் செல்வதற்கு காட்டுகுளத்தில் இருந்து மீமிசல் காவல் நிலையம் வரை உள்ள சாலையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் காட்டுகுளம் பகுதி மக்கள் மீமிசல் சென்று வருவதற்கு முக்கிய சாலையாக திகழ்ந்து வருகிறது. இந்த சாலையில் உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த அக்டோபர்-6 அன்று தெரு விளக்கு சரி செய்யப்பட்டது. நடவடிக்கை ‌எடுத்த ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.



கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு GPM மீடியாவின் அன்பான வேண்டுகோள் :

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலை ( ECR ) பகுதியில் இயற்கை மற்றும் சுகாதாரம் சூழ்ந்த எழில்மிகு அழகிய கிராமமாக காட்சியளித்து வருகிறது. அதே சமயத்தில் நமது ஊர் கோபாலப்பட்டிணத்தில் உள்ள வீடுகளில் வளர்ந்திருக்கும் மரங்களின் கிளைகள் மின்கம்பிகளில் உரசிக் கொண்டிருக்கிறது. இதனால் அடிக்கடி மின்பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைபடுகிறது. 

எனவே உங்கள் வீடுகளில் உள்ள மரங்களின் கிளைகள் மின்கம்பியில் உரசும்படி இருந்தால் அதை உடனடியாக அகற்றுமாறு GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

நமது ஊர் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வெளிநாடு வாழ், வெளியூர் வாழ் மற்றும் உள்ளூர் வாழ் சகோதரர்கள் தங்கள் குடும்ப உறவுகளிடம் இந்த செய்தியை பகிர்ந்து அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஊர் அக்கறையுடன்....
GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
ஆவுடையார் கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments