சிபிஎம் அறந்தாங்கி தாலுக்கா 14வது மாநாடு




சிபிஎம் அறந்தாங்கி தாலுக்கா 14வது மாநாடு 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுக்கா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது மாநாடு அக்டோபர் 13 தேதி தனியார் மண்டபத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா தலைமையில் நகர செயலாளர் தங்கராஜ் அனைவரையும் வரவேற்றார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ,  மாவட்டச் செயலாளர் கவிவர்மன் ஆகியோ சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் வணிகர் சங்க மாவட்ட தலைவர் வரதராஜன்,  மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, சிபிஎம் வழக்கறிஞர்கள்  மாவட்ட செயலாளர் அலாவுதீன், வழக்கறிஞர் வாகை.மணிமாறன்.
சிறப்பழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர்.

மேலும் இந்திய ஜானநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கர்ணா,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்டக்குழு பாண்டிச்செல்வி, தாலுகாக்குழு மேகவர்ணம், சாத்தையா, ஜான், கணேசன், சரோஜா, ராதா, கவிபாலா, கோபாலகிருஷ்ண், ராசு, தர்மராஜ் உள்ளிட்ட தாலூக்கா உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர் .

அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனை ஆக்க வேண்டும், சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனையை தாலுக்கா மருத்துவமணையாக தரம் உயர்த்த வேண்டும், நகராட்சிப் பகுதியில் குண்டும் குழியுமாக பழுதாகி உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்தை உடனே அமல்படுத்த கோரியும், அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும், மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்க வேண்டும் ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாள் ஆக்கிட வேண்டும் 300 கூலி வழங்க வேண்டும், அறந்தாங்கியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்,புதிய  பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்,தற்போது உள்ள பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments